Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 மே 2026: சர்வ ஏகாதசி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 மே 2026: சர்வ ஏகாதசி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-13 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி காலை 9.19 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : அஸ்தம் காலை 8.42 வரை பிறகு சித்திரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு

சர்வ ஏகாதசி. சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பூக்குழி விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வெற்றி

ரிஷபம் - சாதனை

மிதுனம் - பயணம்

கடகம் - சாந்தம்

சிம்மம் - பரிசு

கன்னி - ஆர்வம்

துலாம் - இன்பம்

விருச்சிகம் - துணிவு

தனுசு - நலம்

மகரம் - ஜெயம்

கும்பம் - இரக்கம்

மீனம் - பாசம்

X

Maalai Malar
www.maalaimalar.com