

பராபவ ஆண்டு, வைகாசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசசி காலை 8.58 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திரம் காலை 7.46 வரை பிறகு அஸ்தம்
யோகம் : அமிர்த/சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. பழனி ஸ்ரீ ஆண்டவர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மாயவரம் ஸ்ரீ கௌரி மாயூரநாதர் கைலாச வாகனத்தில் பவனி, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவ திருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள். ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம் - லாபம்
ரிஷபம் - இரக்கம்
மிதுனம் - ஜெயம்
கடகம் - நலம்
சிம்மம் - துணிவு
கன்னி - சாதனை
துலாம் - போட்டி
விருச்சிகம் - லாபம்
தனுசு - பாராட்டு
மகரம் - ஈகை
கும்பம் - நட்பு
மீனம் - பயணம்