Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 மே 2026: பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 மே 2026: பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-8 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி பிற்பகல் 12.39 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : பூசம் காலை 8.40 வரை பிறகு ஆயில்யம்

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு

வளர்பிறை சஷ்டி விரதம். மாயவரம் ஸ்ரீ கௌரி மாயூரநாதர் புஷ்பக விமானத்தில் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர் வெள்ளி நந்தி வாகனத்தில் புறப்பாடு. நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி உற்சவாரம்பம், கேடயசப்பரத்தில் பவனி. திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அமைதி

ரிஷபம் - பெருமை

மிதுனம் - நிறைவு

கடகம் - கவனம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - கடமை

துலாம் - களிப்பு

விருச்சிகம் - கண்ணியம்

தனுசு - சிந்தனை

மகரம் - ஜெயம்

கும்பம் - சாதனை

மீனம் - உண்மை

X

Maalai Malar
www.maalaimalar.com