

விசுவாவசு ஆண்டு பங்குனி-8 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.15 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 1.26 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று வளர்பிறை சதுர்த்தி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமாள் தேரெழுந்தூர் ஸ்ரீ திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயகருக்கு திருமஞ்சன சேவை.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி சமயபுரம், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.
மேஷம்-அனுகூலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-வரவு
கடகம்-பாராட்டு
சிம்மம்-நன்மை
கன்னி-புகழ்
துலாம்- அன்பு
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- தெளிவு
மகரம்-பரிசு
கும்பம்-விருத்தி
மீனம்-அமைதி