Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 மே 2026: அம்மன் கோவில்களில் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 மே 2026: அம்மன் கோவில்களில் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-19 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை நள்ளிரவு 12.47 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : விசாகம் (முழுவதும்)

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடாயாற்று உற்சவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி பகலில் கருடாரூபராய் மண்டுக மகரிஷிக்கு மோட்சமருளுதல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம்.திருமோகூர் காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கநாதர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உதவி

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - பணிவு

கடகம் - சுகம்

சிம்மம் - பாசம்

கன்னி - உறுதி

துலாம் - தனம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - துணிவு

மகரம் - நட்பு

கும்பம் - நலம்

மீனம் - உவகை

X

Maalai Malar
www.maalaimalar.com