

பராபவ ஆண்டு வைகாசி-19 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை இரவு 6.39 வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மூலம் இரவு 9.53 வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகு காலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகர் குதிரை வாகனத்திலும் இரவு தசாவதாரக் காட்சி. அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் திருவீதியுலா. ஸ்ரீ பெரும்புத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், சுந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி.
மேஷம்-உறுதி
ரிஷபம்-தனம்
மிதுனம்-களிப்பு
கடகம்-பரிசு
சிம்மம்-உதவி
கன்னி-ஆர்வம்
துலாம்-பெருமை
விருச்சிகம்-நிம்மதி
தனுசு-யோகம்
மகரம்-திடம்
கும்பம்-உறுதி
மீனம்-நன்மை