Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 மே 2026: திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 மே 2026:  திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-5 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திருதியை இரவு 6.55 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 12.45 வரை பிறகு திருவாதிரை

யோகம் : சித்த/மரணயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்

காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரதோற்சவம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா, சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - புகழ்

ரிஷபம் - செலவு

மிதுனம் - ஆதரவு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - அன்பு

கன்னி - சுபம்

துலாம் - வரவு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - அமைதி

மகரம் - நலம்

கும்பம் - விவேகம்

மீனம் - உவகை

X

Maalai Malar
www.maalaimalar.com