

இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு பங்குனி-5 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை காலை 7.29 மணி வரை பிறகு பிரதமை மறுநாள் காலை 4.59 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.11 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி பண்டிகை), முருகன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்
இன்று தெலுங்கு வருடப்பிறப்பு. யுகாதி பண்டிகை. திருபுவனம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. தொட்டியம் ஸ்ரீ காளியம்மன் திருவீதி உலா. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திராத வல்லபப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டை, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதவல்லி கோவிலில் காலையில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-நேர்மை
கடகம்-லாபம்
சிம்மம்-களிப்பு
கன்னி-சுகம்
துலாம்- சுபம்
விருச்சிகம்-திடம்
தனுசு- சிறப்பு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-பொறுமை
மீனம்-பொறுப்பு