

பராபவ ஆண்டு சித்திரை-4 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை மாலை 5.47 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.05 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திலதர்ப்பணபுரி, திருவள்ளூர் தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். திருப்பத்தூர் ஸ்ரீ ஜயந்தன் பூஜை. திருச்செங்காட்டாங்குடி ஸ்ரீ உத்திரபதஸ்வரர் யானை வாகனத்தில் பவனி. தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.
மேஷம்-லாபம்
ரிஷபம்-பணிவு
மிதுனம்-இரக்கம்
கடகம்-பெருமை
சிம்மம்-பாசம்
கன்னி-உதவி
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-நற்செயல்
கும்பம்-பணிவு
மீனம்-அன்பு