Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஜூன் 2026: சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஜூன் 2026: சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஆனி-1 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை காலை 9.27 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 9.05 வரை பிறகு திருவாதிரை

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம்.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு, திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-சுகம்

மிதுனம்-அமைதி

கடகம்-நன்மை

சிம்மம்-நிம்மதி

கன்னி-உழைப்பு

துலாம்-ஆதரவு

விருச்சிகம்-பண்பு

தனுசு-சாந்தம்

மகரம்-முயற்சி

கும்பம்-பாசம்

மீனம்-உயர்வு

X

Maalai Malar
www.maalaimalar.com