Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 மே 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 மே 2026: பிரதோஷம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-31 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி காலை 8.13 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : ரேவதி இரவு 8.06 வரை பிறகு அசுவினி

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்

பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ரதோற்சவம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பணிவு

ரிஷபம் - பரிவு

மிதுனம் - ஓய்வு

கடகம் - கடமை

சிம்மம் - லாபம்

கன்னி - பரிசு

துலாம் - வரவு

விருச்சிகம் - ஜெயம்

தனுசு - நிறைவு

மகரம் - பரிவு

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - புகழ்

X

Maalai Malar
www.maalaimalar.com