Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 ஜூன் 2026: சர்வ அமாவாசை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 ஜூன் 2026: சர்வ அமாவாசை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-31 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி காலை 11.49 வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : ரோகிணி இரவு 10.41 வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்

சர்வ அமாவாசை, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திர வைபவம். ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பரிசு

கடகம் - மாற்றம்

சிம்மம் - புகழ்

கன்னி - நட்பு

துலாம் - பெருமை

விருச்சிகம் - நற்செயல்

தனுசு - இன்பம்

மகரம் - கடமை

கும்பம் - லாபம்

மீனம் - தாமதம்

X

Maalai Malar
www.maalaimalar.com