Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 ஜூன் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 ஜூன் 2026: பிரதோஷம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-29 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி மாலை 4.27 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 1.47 வரை பிறகு கார்த்திகை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்

பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - போட்டி

ரிஷபம் - பக்தி

மிதுனம் - நன்மை

கடகம் - ஆதரவு

சிம்மம் - நிம்மதி

கன்னி - வரவு

துலாம் - சாதனை

விருச்சிகம் - சாந்தம்

தனுசு - உவகை

மகரம் - ஈகை

கும்பம் - தாமதம்

மீனம் - கனிவு

X

Maalai Malar
www.maalaimalar.com