Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 ஜூன் 2026: சர்வ ஏகாதசி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 ஜூன் 2026: சர்வ ஏகாதசி
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-28 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி இரவு 6.29 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.08 வரை பிறகு பரணி

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்

சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூடப் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வரவு

ரிஷபம் - சுகம்

மிதுனம் - லாபம்

கடகம் - அன்பு

சிம்மம் - நன்மை

கன்னி - முயற்சி

துலாம் - உயர்வு

விருச்சிகம் - தாமதம்

தனுசு - ஆக்கம்

மகரம் - ஆதரவு

கும்பம் - பணிவு

மீனம் - கடமை

X

Maalai Malar
www.maalaimalar.com