

தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் வதிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும், மூர்த்தி-தலம்-தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9.31 மணிக்கு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையும் விழா நடக்கிறது. இதையொட்டி லட்சார்ச்சனையும், சிறப்பு பரிகார ஹோமங்களும் நடைபெற உள்ளது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆசிய ராசிகளில் பிறந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து பரிகாரம் செய்துகொள்ளலாம்.