பஞ்சமியில் செய்ய வேண்டியவை...

பஞ்சமி திதியன்று விரதமிருந்து வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பஞ்சமியில் செய்ய வேண்டியவை...
Published on

பஞ்சமி திதி என்பது அமாவாசை மற்றும் பவுர்ணமியை அடுத்து வரும் 5-வது திதி ஆகும். பஞ்ச என்பது வடமொழி சொல் ஆகும். பஞ்ச என்றால் 5 என்று பொருள்படும்.

பஞ்சமி திதி இரண்டு முறையில் வரும். ஒன்று தேய்பிறை பஞ்சமி, மற்றொன்று வளர்பிறை பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பவுர்ணமியை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.

திதி என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தின் ஆதிக்கத்தை குறிக்கிறது. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வ வழிபாட்டுக்கு உரியதாக வணங்கப்படுகிறது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது.

அதேபோல, துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தசி திதி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கும் போற்றுவதற்கும் உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவார்கள். அஷ்டமி திதியில் கால பைரவருக்கு ஆராதனைகள் செய்வது மிகவும் விசேஷமானது.

அதேபோல, திதிகளில் பஞ்சமி திதியானது, வாராகி தேவியை வணங்குவதற்கு உரிய நன்னாள். பஞ்சமி திதியன்று விரதமிருந்து வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது நாக வழிபாட்டுக்கும் உகந்த நாளாகும். இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com