சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கிய போது எடுத்த படம்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கிய போது எடுத்த படம்.
Published on

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் விவசாயம் செழிக்கவும், நாடு செழிப்படைய வேண்டியும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தாணுமாலயசாமி சன்னதி முன் வைத்தனர்.

பின்னர், சாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்த பின்பு அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வழங்கினார். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு செல்வதால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்களது வாழ்வும் செழிப்படையும் என்பது ஐதீகம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com