சங்கடம் தருமா சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம நாட்களில் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
சங்கடம் தருமா சந்திராஷ்டமம்
Published on

ஒரு ராசிக்கு இடமிருந்து வலமாக எட்டாவது ராசியில் சந்திரன் வரும்பொழுது, அது சந்திராஷ்டமமாகக் கருதப்படுகிறது. அஷ்டமத்துச் சனியை விட, அஷ்டமத்து குருவை விட, அதிகத் தாக்கம் தரக்கூடிய நாட்கள் இவை.

இதுபோன்ற நாட்களில் எதிர்பார்ப்புகள் நடைபெறாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். விரயங்கள் கூடும். பயணங்கள் மாறும். பொறுப்பு சொல்வதால் சிக்கல்கள் உருவாகலாம்.

ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எனவே சந்திராஷ்டம நாட்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உரிய வழிபாடுகளை வைத்துக்கொண்டால் ஓரளவாவது நற்பலன் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com