வியாசராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா

சேலம் முதல் அக்ரஹாரம் வியாசராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமியின் 346-வது ஆராதனை விழாயொட்டி பாலாபிஷேகமும், பாதுகாபூஜை மற்றும் கனகாபிஷேகம் நடந்தது.
வியாசராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா
Published on

சேலம் முதல் அக்ரஹாரம் வியாசராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமியின் 346-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி காலை 8 மணிக்கு பாலாபிஷேகமும், பாதுகாபூஜை மற்றும் கனகாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு ராகவேந்திர சாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பஜனை குழுவினரின் சொற்பொழிவு நடந்தது. மேலும் லட்சுமி நரசிம்மர், அனுமன், சத்தியநாராயண சுவாமி ஆகியோர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தனர். மேலும் ராகவேந்திர சுவாமியின் குருக்களான வியாசராஜர், பாதராஜர், ஜயதீர்த்தர் பிருந்தாவனத்தில் தங்கக்கவசத்தால் அருள்பாலித்தனர். ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு ராகவேந்திர சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும், கனகாபிஷேகமும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் தலைமையில் கர்நாடக இசைக்கச்சேரியும், மாலை 5.30 மணிக்கு அலங்கார தேரில் வீதிஉலாவும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com