பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் சாமியும், நந்திகேஸ்வருக்கும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கோவில் பிரகாரத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com