நித்தமும் சுமங்கலியாக இருக்க நித்திய சுமங்கலி மாரியம்மன் வழிபாடு!

உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோவிலில் மட்டும் ஓர் தனி சிறப்பு உண்டு.
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது.

தல வரலாறு:

முன்பொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது.

பின்னர் அங்கு தோண்டிப்பார்க்கும் பொது சுயம்பு வடிவில் அம்மன் வெளிப்பட்டார். பின்னர் ஒருவருக்கு அருள்வாக்கு வந்து கோவில் காட்டுமாறு உதரவு வரவே, மக்கள் ஒன்றுகூடி கோவில் அமைத்தனர்.

பெயர்க் காரணம்:

உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோவிலில் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக மாரியம்மன் கோவில்களில் திருவிழா காலங்களில் மட்டுமே கம்பம் நடுவது வழக்கம்.

ஆனால், இந்த கோவிலில் மட்டுமே மூன்று கிளைகள் கொண்ட மரக்கம்பம் எப்போதும் அம்மன் சன்னதியின் முன்பாக நிரந்தரமாக இருக்கும். இந்தக் கம்பம் அம்மனின் கணவரைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இக்கோவிலில் அம்மன் எப்போதும் தனது கணவரை தரிசித்து கொண்டபடி இருக்கிறாள். அதனால் இவருக்கு "நித்திய சுமங்கலி" என்ற பெயர் வந்தது. பெண்கள் இக்கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு.

rasipuram nithya sumanagli maari amman

சிறப்பு:

அம்மன் சுயம்பு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் உள்ள கம்பத்தை வழிபட்டு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து பிரசாதமாக உட்கொள்ள, ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கண் நோய்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து நலம் பெற இத்தலத்து அம்மனை வழிபடுவது நலம் தரும். ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.

15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வருவாள். குறிப்பாக பூச்சாட்டு விழா மிகவும் சிறப்பானதாகும். அன்று அம்மனை மலர்களால் நிரப்பி விழா எடுப்பார்கள்.

rasipuram nithya sumanagli maari amman

கம்பம் நடும் நாளில் புதிய கம்பம் மாற்றப்படும். பின்னர் அக்கினி சட்டி எடுத்தல், தீமிதித்தல், அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் போன்று இந்த 15 நாட்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதுமட்டுமல்லாமல், ஒவொரு மாதங்களிலும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. காய்கனி அலங்காரம், வெற்றிலை அலங்காரம், வேப்பிலையாடை அலங்காரம், வளையல் பூஜை(வளைகாப்பு), விளக்கு பூஜை போன்றவை நடைபெறும்.

மேலும் நவராத்திரி கொலுவிலும், நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து அருள்புரிவாள்.

இது திருமாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி வரம் மற்றும் குழந்தை பாக்கியம் அருளும் கோவில். கணவன்மார்களின் உடல் நோய்வாய்ப்பட்டிருந்தால் இக்கோவிலுக்கு சென்று கொடிமரத்தில் பாலோ அல்லது தண்ணீரோ ஊற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 6.00 மணி முதல் 12.00 மணி வரை

மாலை: 4.30 மணி முதல் 9.00 மணி வரை

ஓம் அம்பிகையே போற்றி!

rasipuram nithya sumanagli maari amman
X

Maalai Malar
www.maalaimalar.com