மங்களம் தரும் அபிராமி அம்பிகை ஸ்துதி

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அபிராமி அம்பிகை ஸ்துதியை சொல்லி வந்தால் துன்பம் விலகி நன்மைகள் உண்டாகும்.
மங்களம் தரும் அபிராமி அம்பிகை ஸ்துதி
Published on

காலையாத கல்வியும் குறையாத

வயதுமோர் கபடு வாராத நட்பும்

குன்றாத வளமையுங்குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்

மாறாத வார்த்தையும் தடைகள் வாராத

கொடையும் தொலையாத நிதியமும்

கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தின் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்

அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com