வாய்மேடு அருகே முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வாய்மேட்டை அடுத்த திருக்குவளைகட்டளையில் முனீஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கிடா வெட்டி பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
முனீஸ்வரன்
முனீஸ்வரன்
Published on

வாய்மேட்டை அடுத்த திருக்குவளைகட்டளையில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கிடா வெட்டி பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக சித்திரை மாதத்தில் பக்தர்கள் கிடா வெட்டி பூஜை நடத்த முடியவில்லை. ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளதால் ஆடி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதை முன்னிட்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com