மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
Published on

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து 23-ந் தேதி மயானக் கொள்ளை விழாவும், 24-ந்தேதி தங்க பல்லக்கு மற்றும் பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் தீமிதி விழாவும் நடைபெற்றது.

நேற்று காலை தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவில் வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் செண்பகம், ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com