மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
Published on

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 12-ம் நாளான நாளை (வியாழக் கிழமை) தாயுமான அடிகள் உற்சவமும், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com