

இவள் அணியும் அனைத்தும் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களே. மஞ்சள் நிறம் கொண்ட இந்த தேவி எப்போதும் மகாவிஷ்ணு போன்று பீதாம்பரம் தரிசித்திருப்பதால், ‘பீதாம்பசா’ என்றும் அழைக்கப்படுகிறாள்.
மகா விஷ்ணு பகளாமுகி காயத்ரி மந்திரத்தை பிரம்மாவிற்கும், பிரம்மா சாங்க்யாயனர் என்ற மகரிஷிக்கும் உபதேசித்தார். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
பகளாமுகி காயத்ரி மந்திரம் :
‘ஹ்ரீம் ப்ரம்ஹாஸ்தர வித்யாயை வித்மேஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளாஹ் ப்ரசோதயாத்’
பிரம்மாஸ்திர வித்தைக்கு உரியவளை அறிந்து கொள்வோம். பீதாம்பரத்தை உடுத்தியிருக்கும் அந்த தேவி மீது தியானம் செய்வோம். பகளாமுகி தேவியான அவள் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து அருள் செய்வாள் என்பது இதன் பொருள்.