

அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு விவசாயி மயங்கி விழுந்தார். அப்போது அங்கு தோன்றிய பெருமாள், தான் இவ்விடத்தில் புதரின் புற்றில் அரங்கநாதர் என்ற திருப்பெயரில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளதாகவும், தன்னை வழிபடுமாறும், கூறி மறைந்தார். இதைத் தொடர்ந்து அவ்விடத்தில் பொது மக்கள் ஒன்று சேர்ந்து சிறிய மேடையில் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் 1656ல் மைசூர் மன்னனான கண்டீரவநரசராசன் மதுரை மீது படை எடுத்தான். படையெடுப்பின் போது எதிர்த்தவர்கள் மூக்குகளை எல்லாம் அறுத்தும் ஊர்களை கொள்ளையடித்தும் திண்டுக்கல்லில் பாசறைஅமைத்து படைகளுடன் தங்கினான்.
திருமலைநாயக்கரின் வேண்டுகோளை ஏற்று சிவகங்கை ரகுநாதசேதுபதி 25 ஆயிரம் வீரர்களை அனுப்பி வைத்தார். அந்த வீரர்களை சேர்த்துக் கொண்டு மைசூர் படைகளுடன் திருமலை நாயக்கர் போரிட்டார். இதனைக் கண்டு அஞ்சிய மைசூர் படைகள் புறமுதுகிட்டு மைசூரை நோக்கி ஓட ஆரம்பித்தன. அப்படையை துரத்தி கொண்டு வந்த திருமலை நாயக்கர் வெள்ளாதி பிச்சு மன்றாடியார் கோட்டையை அடைந்தார்.
அங்கு நோயின் உக்கிரத்தால் தங்கினார். அவரது தம்பி குமாரமுத்து நாயக்கனை பெரும்படையுடன் மைசூருக்கு அனுப்பி வைத்தார். மைசூரை முற்றுகையிட்டு அவர்கள் எதிர்பட்டவர்களின் மூக்குகளை அறுத்த தோடு மன்னன் கண்டீரவ நரசராசன் மூக்கையும் அறுத்துக் கொண்டு மதுரைக்கு திரும்பினர். இது வரலாற்றில் மூக்கறுப்பு போர் என்று குறிக்கப்பட்டுள்ளது.
வெள்ளாதி பிச்சுமன்றாடியார் கோட்டையில் தங்கியிருந்த திரு மலைநாயக்கர் கனவில் பெருமாள் தோன்றி தனது கோவிலில் உள்ள காரைச் செடியின் இலைகளை எடுத்து வேகவைத்து முதுகில் உள்ள ராஜப்பிளவையில் (புற்று குழியில்) வைத்துக் கட்டி வந்தால் நோய் குணமாகும் என்று அருள்பாலித்தார்.