புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி

எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 49-வது ஆண்டு பெருவிழா கடந்த 21-ந் தேதி இரவு 8 மணிக்கு அரசக்குழி பங்குதந்தை அல்போன்ஸ் தலைமையில் கூட்டு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி காலை, மாலை நேரத்தில் ஆலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. மேலும் தினந்தோறும் இரவில் தேர்பவனி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி மாலையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 11 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் புனித ஜெபமாலை அன்னை, குழந்தை ஏசு, அந்தோணியார் உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடந்தது. பவனியானது எறையூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதையடுத்து நேற்று காலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. இதில் எறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com