வெற்றி தரும் அம்பாள் துதிப்பாடல்

கீழ்க்காணும் மந்திரத்தைத் தினமும் 16 முறை கூறி வழிபட்டு வந்தால், வாழ்வில் வெற்றிகளே தொடரும்.
Published on

இல்லாமை என்னுமொரு பொல்லாத பாவியால்

    எந்நேரமும் இடருறாமல்

ஏற்காமல் ஏற்பவர்க் கில்லையென் றுரையாமல்

    இழிதொழில்கள் செய்திடாமல்

கல்லாத புல்லர்உற வில்லாமல் கடுபிணி

    கனாவிலும் எனைத் தொடாமல்

கற்றப் பெரியோர்களோடு தர்க்கித்தெதிர்த்துக்

    கடிந்தசொற் சொல்லிடாமல்

வெல்லாமை வென்றவன் இடத்தில்வளர் அமுதமே

    விரிபொழில் திருமயிலைவாழ்

விரைமலர்க் குழல்வள்ளி மறைமலர்ப் பதவல்லி

    விமலிகற் பகவல்லியே!

X

Maalai Malar
www.maalaimalar.com