புதன் பகவானை பற்றிய சிறப்பு தகவல்கள்

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன் பகவான். இவரை பற்றிய சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
புதன் பகவான்
புதன் பகவான்
Published on

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார்.

ராசி - மிதுனம், கன்னி

திக்கு - வடகிழக்கு (எம திசை)

அதிதேவதை - விஷ்ணு

பிரத்யதி தேவதை - நாராயணன்

நிறம் - வெளிர்பச்சை

வாகனம் - குதிரை

தானியம் - பச்சைப்பயறு

மலர்  - வெண்காந்தள்

வஸ்திரம் - பச்சை நிற ஆடை

ரத்தினம் - மரகதம்

நிவேதனம் - பாசிப்பருப்புப் பொடி அன்னம்

சமித்து - நாயுருவி

உலோகம் - பித்தளை

இனம் - அலி

அங்கம் - வாக்கு (தோல்)

நட்பு - சூரியன், சுக்கிரன்

காரகத்துவம் - மாதுலகாரகன், வித்தைக்காரகன்

மனைவி - இளை

மக்கள் - புரூரவா

பிரதான தலம் - வல்வில்ராமர் கோவில் திருப்புள்ளம் பூதங்குடி

அருள் பெற்ற சிவத்தலங்கள் - திருவெண்காடு, மதுரைகச்சி நெறிக் காரைக்காடு மற்றும் சில

குறிப்பிடத்தக்க திருமால்பதி - ஆழ்வார்த் திருநகரி

உறவு - சந்திரனின் மகன்

வழிபாட்டு பலன் - அறிவு, வளர்ச்சி, எழுத்தாற்றல்.

X

Maalai Malar
www.maalaimalar.com