அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா

லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.
லால்குடி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.
லால்குடி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.
Published on

லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கல அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேரில் தூய அடைக்கல அன்னை மலர் அலங்காரத்தில் பவனி வந்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியவர்சீலி பங்குத்தந்தை சிரில் ராபர்ட், பாதிரியார் அருள்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

இதுபோல் மணிகண்டம் அருகே பாத்திமாநகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கூட்டு திருப்பலி நடைபெற்றன. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை திருச்சி மறைமாவட்ட ஆயர் இல்ல தொடர்பாளர் அருட்தந்தை யூஜின் தலைமையில் திருவிழா மற்றும் புதுநன்மை விழா திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை கபிரியேல் தலைமையில் பங்குமக்கள் செய்திருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com