ஆடி மாதத்தில் புதுமனை புகுவிழா

ஆடி மாதத்தில் புதுமனை புகுவிழா

ஆடி மாதம் எந்தப் புது முயற்சியும் தொடங்கக் கூடாது என்றாலும் 18-ந் தேதி மட்டும், பதினெட்டாம் பெருக்கு என்று வர்ணிக்கப்படுவதால் அந்த நாளில் நல்லநேரம் பார்த்து புதுமனை புகுவிழா நடத்தலாம்.
Published on

ஆடி மாதம், ஆடிக் கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் தொடங்கக் கூடாது என்பது நியதி. இருந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும், பதினெட்டாம் பெருக்கு என்று வர்ணிக்கப்படுவதால் அந்த நாளில் நல்லநேரம் பார்த்து புதுமனை புகுவிழா நடத்தலாம்.

இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம். எந்தப் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக் கொள்ள ஆடி மாதம் 18-ந் தேதி சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டின் ஆடிப்பெருக்கு 3.8.2017 அன்று வருகிறது.

அன்றைய தினம் நல்ல நேரம்பார்த்து புதுமுயற்சி செய்யலாம். வீடு மாற்றம் செய்தாலும், நாடு மாற்றம் செய்தாலும், வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்ல நாள் அது.

X

Maalai Malar
www.maalaimalar.com