

தலைசிறந்த நாய்ஸ் கேன்சலிங் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களை வழங்குவதில் சோனி நிறுவனம் இன்று வரை தனிச்சிறப்பு மிக்க பிராண்டாக விளங்குகிறது. சோனி நிறுவனத்தின் WH-1000XM4 ஓவர்-இயர் ஹெட்போன் சீரிசுக்கு இன்று வரை குறிப்பிடத்தக்க போட்டியாளராக எந்த மாடலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், சோனி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஓவர்-இயர் ஹெட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது சோனி WH-1000XM5 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதன் அம்சங்கள் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் இதன் டிசைனில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
முந்தைய சோனி ஹெட்போன் மாடல்களான WH-1000XM3 மற்றும் WH-1000XM4 வரிசையில் புதிய WH-1000XM5 மாடல் சோனி ஹெட்போன் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீரிஸ் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் டாப் எண்ட் வயர்லெஸ் ஹெட்போன் மாடல்களாக இருக்கும்.