

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.