அதிக சவுகரியம் கேடு தரும்!- மருத்துவம் அறிவோம்-130

குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களின் சமநிலை இன்மை.
அதிக சவுகரியம் கேடு தரும்!- மருத்துவம் அறிவோம்-130
Published on

குடல் எரிச்சல் நோய்: இந்த பாதிப்பு பலருக்கு காணப்படுகின்றது. இது குடலின் பாதிப்பில் ஏற்படும் நீடித்த செயல்முறை கோளாறு எனலாம். இது உயிருக்கு ஆபத்தான நோயாக இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவரின் தினசரி வாழ்க்கை தரத்தினை மிக அதிகமாக பாதிக்கக் கூடியது.

மருத்துவ பரிசோதனைகளில் குடலின் அழற்சி, புண் அல்லது கட்டி போன்றவை இல்லாமல் இருந்தாலும் இதனால் நோயாளி வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். உலக அளவில் சுமார் 15 சதவீதம் மக்கள் இந்த பாதிப்புகளில் உள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் நகர் புறங்களில் இது அதிகமாகக் காணப்படுகின்றது.

குடல் எரிச்சல் நோய் என்றால் என்ன?

குடல் இயக்கம் மற்றும் குடல் - மூளை அச்சு இடையிலான ஒத்திசைவு கோளாறால் ஏற்படும் பாதிப்பே ஐ.பி.எஸ். எனப்படும் குடல் எரிச்சல் நோய் ஆகும். நீடிக்கும் வயிற்று வலி, கழிவு வெளியேற்றுவதில் ஏற்படும் மாற்றங்கள். மன அழுத்தத்துடன் தொடர்பு உடையது. அதிக வயிற்றுப் போக்கு அல்லது அதிக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் என மாறி மாறி இருப்பது. இப்படித்தான் என வகைப்படுத்த முடியாத கழிவுப் பொருள் வெளியேற்றம் இதன் அறிகுறிகள்.

காரணங்கள்- ஒரு காரணம் என்று இல்லாமல் பல காரணங்கள் சேர்ந்து இதனை உருவாக்குகின்றன.

* மன அழுத்தம், மனச் சோர்வு, கவலை இவை குடல் இயக்கத்தினை பாதிக்கின்றன.

* குடல் இயக்க கோளாறு

* சாதாரண குடல் இயக்கமும் அதிக வலியாக உணரப்படுவது.

* குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களின் சமநிலை இன்மை.

* கடுமையான வயிற்றுப் போக்குக்குப் பிறகு சிலருக்கு ஐ.பி.எஸ். உருவாகும்.

இதன் முக்கிய அறிகுறிகள்

* வயிற்றில் பிடிப்பு போன்ற வலி.

* வயிறு உப்பசிம், வீக்கம்.

* கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் மாற்றம்.

* வயிற்றில் கழிவு நீக்கம் முழுமை பெறாத உணர்வு.

* களைப்பு.

* மன அழுத்தம்.

* தலைவலி போன்றவை இருக்கும்.

* கழிவு வெளியேற்றத்தில் ரத்தம் வருதல்.

* எடை திடீரென குறைவது.

* இரவில் வலி இருத்தல்.

* குடும்ப ரத்த உறவுகளில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தாலும் உடனடி மருத்துவர் ஆலோசனை அவசியம்.

* பொதுவில் குடல் எரிச்சல் நோய் இருப்பவர்கள் அதிகம் புளித்த உணவுகள், அதிக மசாலா, எண்ணெய்.

* கார்பனேற்ற பானங்கள், அதிகம் காபி இவற்றினை தவிர்க்க வேண்டும்.

* நார்சத்து, புரோயாடிக், போதிய அளவு நீர், மருத்துவ அறிவுரை, யோகா, தியானம் ஆகியவற்றினை பின்பற்ற வேண்டும்.

* ஒழுக்கமான உணவு நேரம், மிதமான உடற்பயிற்சி, போதிய உறக்கம், திரை நேர கட்டுப்பாடு, உணவினை நன்குமென்று விழுங்குதல் ஆகியவற்றினை கடைபிடிக்க வேண்டும். பாதிப்பு உடையோர் வெளியில் செல்லவே அச்சம் கொள்வர். பயணம் பதட்டம் தரும். ஆனால் தகுந்த மருத்துவம், உணவு முறைகளை பின்பற்றும் பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கமலி ஸ்ரீபால்
கமலி ஸ்ரீபால்

அதிக சவுகர்யம் மனிதனை மவுனமாக அழிக்கும்

எப்படி இருக்கீங்க? சவுக்கியமா? என்பது பொதுவாக நலம் விசாரிக்கும் சொல். சவுகர்யம் என்ற சொல் நமக்கு இனிமையான உணர்வை அளிக்கிறது. உடல் சுகம், மனஅமைதி, பாதுகாப்பான சூழல் இவை அனைத்தும் வாழ்வின் ஒரு அத்தியாவசிய அங்கம். ஆனால் அளவுக்கு மீறிய சவுகர்யம். முயற்சி இல்லாத வாழ்க்கை, சவால்களை தவிர்க்கும் மனப்போக்கு. இவை மெதுவாக மனிதனின் உடல், மனம், அறிவு ஆன்மீக வளர்ச்சியை சிதைக்கத் தொடங்குகின்றன.

அதனால் தான் ‘அதிக சவுகர்யம் அமைதியான உயிர் கொல்லி என பல உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சவால்கள் இல்லாத வாழ்க்கை சுகமாகத் தோன்றினாலும் அது முன்னேற்றத்தின் கதவினை மூடி விடுகின்றனது.

உடல் ஆரோக்கியத்தில் சவுகர்யத்தின் தாக்கம்

இன்றைய நவீன வாழ்க்கை குறைந்த உடற்பயிற்சி. அதிக வசதி என்ற பாதையில் செல்கின்றது.

* லிப்ட், கார், ஏர் கண்டிஷன்.

* நீண்ட நேரம் அமர்ந்த வேலை.

* உடனடி உணவுகள்.

இவை அனைத்தும் அளவாகத் தேவைதான். ஆனால் இவை கூடும் போது உடலுக்கு சவுகர்யமாகத் தெரியலாம். ஆனால்

* உடல் பருமன் * நீரிழிவு * ரத்த அழுத்தம் * இதய நோய்கள் போன்ற வாழ்க்கை முறையால் உண்டாகும் நோய்கள் அதிகரிக்கின்றன.

* உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உடற்பயிற்சி குறைவு.

* உலக அளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகின்றது.

* ஹார்வார்ட் மெடிக்கல் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுகள்படி தினசரி 30 நிமிட உடற்பயிற்சி பல நாட்பட்ட நோய்களைத் தவிர்க்கும் எனக் கூறுகின்றன.

அதனால் உடலுக்கு சிறு சிரமம் தேவை. தசைகள் சவால்களை எதிர்கொள்ளும் போது வலுப்பெறும்.

மனவளர்ச்சியில் சவுகரியத்தின் பாதிப்பு

மனிதன் இயற்கையாகவே சிரமங்களைத் தவிர்க்க விரும்பு கின்றான். ஆனால் மனவளர்ச்சி சவால்களின் வழியேத்தான் உருவாகின்றது.

* புதிய திறன்களை கற்றல், பொது மேடையில் பேசுதல், தோல்வியை எதிர்கொள்வது. இவை அனைத்தும் வசதி எல்லைக்கு வெளியே உள்ள செயல்கள். ஸ்டான்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் சவால்களை ஏற்கும் மனப்போக்கு கொண்டவர்களே நீண்ட காலத்தில் வெற்றி பெறுகின்றார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.

சவுகர்ய வட்டத்திற்குள் மட்டும் வாழ்வது தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். புதுமை சிந்தனை இருக்காது. பயம், பதட்டம் ஆகியவை இருக்கும்.

ஆன்மீக நோக்கில் சவுகர்யம்

தவம் என்பது உடல், மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் - இது ஒரு ஒழுக்கப்பயிற்சி. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல் அளவான உணவு, அளவான உறக்கம், ஒழுக்கமான செயல். இவையே யோகத்தின் அடிப்படை ஆகும்.

மிகுந்த சவுகர்யமும் அல்ல, மிகுந்த துன்பமும் அல்ல. சமநிலைதான் உயர்வு. இதற்கு மகான்கள் காட்டிய வழிகள் தான் விரதம், தியானம், ஒழுக்கம் ஆகிய இவை அனைத்தும் சவுகரியத்தை மீறிய முயற்சிகள் ஆகும்.

தொழில் முறையில் மாற்றம்

ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ சவுகர்யம் மிக அதிகம் கூடினால் புதுமை குறையும், போட்டி மனப்போக்கு சோர்வடையும், வளர்ச்சி நின்று விடும்.

பல வெற்றிகரமான நிறுவனங்கள் தொடர்ந்து சவால்களைத் தேடி செல்கின்றன. ‘தொடர் முன்னேற்றம்’ என்ற கொள்கையைக் கொண்டுள்ளன.

ஆக அதிக சவுகர்யம்

முன்னேற்றத்தினை நிறுத்துகின்றது. உடல் நலத்தை பாதிக்கின்றது. மன உறுதியை குறைக்கின்றது. ஆன்மீக சோம்பலை உருவாக்குகின்றது. வாழ்க்கையின் நோக்கத்தினை மங்கச் செய்கின்றது. உடனடி சுகம் தந்தாலும் நீண்ட கால திறமையை அழிக்கின்றது. சவுகர்யம் முற்றிலும் தவறல்ல. ஆனால் அது இலக்கு அல்ல.

ஓய்வுக்கான இடைநிலை மட்டுமே. எனவே தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். வாரத்திற்கு ஒரு புதிய திறன் கற்றல் வேண்டும். மாதத்திற்கு ஒரு சேவை செயல் புரிய வேண்டும். தியானம் மற்றும் சுய பரிசோதனை அன்றாடம் செய்ய வேண்டும்.

மருத்துவமும், ஆன்மீகமும் ஒன்றாக சொல்லும் ஒரு உண்மை- வளர்ச்சி எப்போதும் சிறு சிரமத்தின் வழியே வருகிறது.

தசைகள் பயிற்சியால் வலுப்படும்.

மனம் சவாலால் உறுதியாகும்.

ஆன்மா ஒழுக்கத்தால் ஒளிரும். ஆக சவுகர்யம் நமக்கு ஓய்வு தரட்டும். அது நம் வாழ்க்கையை வழி நடத்தும் அரக்கனாக மாற விடக் கூடாது.

சிறு சிரமத்தைத் தேர்வு செய்யும் மனிதனே பெரிய சாதனையை படைப்பான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com