2023 ரீவைண்ட்: எக்ஸ் மறுமலர்ச்சிக்கு வழி தேடும் மஸ்க்

முன்னதாக டுவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றினார் மஸ்க்விளம்பர வருவாய் மஸ்க் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைந்தது
2023 ரீவைண்ட்: எக்ஸ் மறுமலர்ச்சிக்கு வழி தேடும் மஸ்க்
Published on

உலக புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) நிறுவனத்தை, 2022ல் உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். 2023ல் மஸ்க் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை வளர்க்கவும் பல அதிரடி முயற்சிகளை எடுத்தார். முன்னதாக "டுவிட்டர்" பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார்; நிறுவன இலச்சினையை (logo) மாற்றினார்; பல உயர்மட்ட அதிகாரிகளையும், கடைநிலை மற்றும் இடைநிலை ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார்; தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார். ஆனால், இதுவரை "எக்ஸ்" விளம்பர வருவாய் அவர் எதிர்பார்த்தது போல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, எக்ஸ் குறித்த தனது திட்டங்களை மஸ்க் மாற்றியமைப்பார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com