

புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் யுரேகா பிளாக் எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் சீன நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள யுரேகா பிளாக் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யு யுரேகா ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியிடப்பட்டுள்ள யு யுரேகா பிளாக் வளைந்த எட்ஜ் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
யு யுரேகா பிளாக் சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் டிஸ்ப்ளே 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* கைரேகை ஸ்கேனர்
பல்வேறு ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்களை கொண்டுள்ள யு யுரேகா பிளாக் கொண்டு முழு திரையை ஸ்கிரீன் ஷாட் எடுத்தல், ஒற்றை கையில் வசதியாய் பயன்படுத்துவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள யுரேகா பிளாக் இந்தியாவில் ரூ.8,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.