ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை

ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை
Published on: 

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று கார்த்திகேயனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com