நெட்டப்பாக்கம் அருகே வீட்டை சூறையாடி கணவன்- மனைவிக்கு கொலை மிரட்டல்

நெட்டப்பாக்கம் அருகே குப்பை கொட்டும் தகராறில் வீட்டை சூறையாடி கணவன்- மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் குணாளன். இவரது மனைவி பூரணி (வயது 42).

கணவன்- மனைவி இருவரும் அங்குள்ள அரசு பள்ளி அருகில் பழக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் குணாளனும், அவரது மனைவி பூரணியும் வீட்டில் இருந்தனர். அப்போது ராஜேஸ்வரியின் உறவினர் சிலம்பு என்ற சிலம்பரசன் (28) என்பவர் குணாளனின் வீட்டுக்குள் அத்து மீறி புகுந்து கையில் வைத்திருந்த தடியால் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சாமி படங்களை அடித்து உடைத்து சூறையாடினார்.

இதனை தட்டிக்கேட்ட பூரணியின் மாமியார் ஜானகியை சிலம்பரசன் கையால் தாக்கினார். இதனை பார்த்து பயந்து போன பூரணியும், அவரது கணவர் குணாளனும் வீட்டின் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனர்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தால் கொலை செய்து விடுவேன் என்று குணாளனையும், பூரணியையும் மிரட்டி விட்டு சிலம்பரசன் சென்றார்.

இதுகுறித்து பூரணி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com