கிருஷ்ணஜெயந்தி விழாவில் வாலிபர் அடித்துக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கொலை
கொலை
Published on

தியோரியா:

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள படேல் நகர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்கு அதே பகுதியைச் சேர்ந்த முன்னுலால் (25) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினார். இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் முன்னுலாலை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

கொலை குறித்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தை உள்ளடக்கிய பர்காஜ் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாக உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com