அண்ணாநகரில் வாலிபர் கொடூர கொலை: போலீசார் விசாரணை

அண்ணாநகரில் அடையாளம் தெரியாத வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகரில் வாலிபர் கொடூர கொலை: போலீசார் விசாரணை
Published on

அம்பத்தூர்:

அண்ணாநகர் அன்னை சத்யா நகரில் சுடுகாடு இருக்கிறது.

இந்த சுடுகாடு அருகே உள்ள முட்புதரில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பயங்கர வெட்டுக் காயங்கள் இருந்தது.

முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்தது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த வாலிபர் நீலநிற ஜீன்ஸ் பேண்டும், வெள்ளை கலர் சட்டையும் அணிந்து இருந்தார். அவரது அடையாள அட்டை எதுவும் உடைகளில் இல்லை.

இதனால் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் அந்த வாலிபர் யார்? எந்த இடத்தை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

அந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்தன. இதனால் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் கொல்லப்பட்டு இருக்கலாமா? என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com