கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபர்

கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண்கள் குளிப்பதை எட்டி பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபர்
Published on

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள அந்தோணியர் தெருவை சேர்ந்த 17 வயது வாலிபர், பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்த்து செல்போனில் படம் பிடித்து ரசித்துள்ளார்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் குளிக்க போவதை நோட்டமிட்டு செல்போனில் ரகசியமாக படம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவி ஒருவர் நேற்று தனது வீட்டு பாத்ரூமில் குளித்துள்ளார்.

அப்போது, பாத்ரூம் அருகே உள்ள முருங்கை மரத்தில் அந்த வாலிபர் ஏறி மாணவி குளிப்பதை ரசித்து பார்த்துள்ளார்.

மாணவி குளிப்பதையும் செல்போனில் பதிவு செய்துள்ளார். வாலிபரை பார்த்துவிட்ட மாணவி கத்தி கூச்ச லிட்டார். இதையடுத்து, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீசில் மாணவியின் தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை பிடித்து கைது செய்தனர்.

வாலிபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இளம்பெண்கள் குளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. அந்த வீடியோக்களை அவர் அழித்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவருக்கு 17 வயதே ஆவதால் திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சிறார் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com