புகளூரில் இளம்பெண்ணுக்கு பீர்பாட்டில் குத்து- வாலிபர் கைது

புகளூரில் துணி துவைத்த போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணைபீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புகளூரில் இளம்பெண்ணுக்கு பீர்பாட்டில் குத்து- வாலிபர் கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

 கரூர் மாவட்டம் புகளுர், ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ராதா (வயது 28).இவர் பழனிமுத்து நகர் அருகே அரசமர வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது  புகளுர்பழனி முத்து நகரைச் சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவர் அப்பகுதிக்கு வந்து ராதாவிடம் தகராறில் ஈடுபட்டார். 

இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் அருகில் கிடந்த பீர்பாட்டிலை உடைத்து ராதாவை குத்தினார்.  இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து  சென்று ராதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் ராதா மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com