ஆபாசமாக உடை அணிந்திருந்தை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

ஆபாசமாக உடை அணிந்திருந்ததை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சேதராப்பட்டு:

புதுவை தவளக்குப்பத்தை சேரந்தவர் செந்தில் (வயது38). இவர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல காலாப்ட்டில் இருந்து பஸ்சில் புறப்பட்டு வந்தார்.

அப்போது அந்த பஸ்சில் சென்ற ஒரு வாலிபர் ஆபாசமாக ஆடை அணிந்து நின்றபடி பயணம் செய்தார். அந்த பஸ்சில் ஏராளமான பெண்கள் பயணம் செய்ததால் அவர்கள் முகம் சுளித்தபடி வந்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டு செந்தில் அந்த வாலிபரிடம் இதுபோல் ஏன் ஆடை அணிகிறீர்கள் என்று தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் போலீஸ் ஏட்டு செந்திலை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அந்த வாலிபர் போலீஸ் ஏட்டு செந்திலை தாக்க முயற்சித்தார். இதையடுத்து பயணிகள் உதவியோடு அந்த வாலிபரை போலீஸ் ஏட்டு செந்தில் பிடித்து கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அந்த வாலிபர் பிள்ளைச்சாவடி முருகன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து விஜய்யை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com