சூலூர் அருகே சிறுவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

சூலூர் அருகே சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி எடுத்து வர மறுத்த சிறுவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சூலூர்:

சூலூர் அடுத்துள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் பஜனைவீதியில் வசித்து வரும் மணிகண்டன்(43) என்பவர் வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், சிறுவனிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி எடுத்து வருமாறு கூறினார். ஆனால் அவர் எடுத்து வர மறுத்து அங்கேயே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனை வயிற்றில் குத்தினார். 

இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com