திருமங்கலத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பிய வாலிபர் கைது

திருமங்கலத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

திருமங்கலம்:

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குழந்தைகள் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் கவிதா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில், திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்த அருண்குமார் (வயது29) என்பவர் குழந்தைகளின் ஆபாச படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச படங்களை பதிவிட்ட அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com