மது குடிக்க பணம் தர மறுத்த தாய், தந்தையை தாக்கிய வாலிபர் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தாய், தந்தையை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 55). இவர்களது மகன் செந்தில் (35). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் தனது தாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் தனது தாயை தாக்கினார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டு தடுக்க ஓடி வந்த தந்தையையும் தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து பாக்கியலட்சுமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com