நாகர்கோவிலில் தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது

நாகர்கோவிலில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் தொழிலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 54). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைமுடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஏ.ஆர். கேம்ப் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து வாலிபர் ஒருவர் மதுகுடிக்க பணம் கேட்டார். ராஜகுமார் பணம் இல்லை எனகூறினார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜகுமாரை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார்.

இது குறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜகுமாரை கொல்ல முயன்றது ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவ மகேஷ்குமார் என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com