அரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சிறியரக விமானம் மைதானத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர் ஆனந்த் பட்டேல் என தெரியவந்துள்ளது. #planecrash
அரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இருந்து லாஸ் வேகாஸ் நகரை நோக்கி கடந்த 9-ம் தேதி புறப்பட்டு சென்ற சிறியரக தனியார் விமானம், உயரக்கிளம்பிய 15 நிமிடங்களில் பீனிக்ஸ் நகரின் அருகாமையில் உள்ள ஸ்காட்ஸ்டேல் கோல்ப் விளையாட்டு மைதானத்தில் விழுந்து நொறுங்கி, தீக்கிரையானது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் சென்ற ஆறுபேரும் உடல் கருகி உயிரிழந்தனர். 

இந்நிலையில், இந்த கோர விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர் ஆனந்த் பட்டேல்(26) என்பது தற்போது தெரியவந்துள்ளாது.

இந்தியாவை சேர்ந்த ஆனந்த் பட்டேல், தன்னோடு ஒட்டிப்பிறந்த சகோதரரான ஆகாஷ் என்பவருடன் கல்வி கற்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார். பின்னர், அந்நாட்டின் குடியுரிமை பெற்று, ‘வாட்ஸ் ஹேப்பி குளோத்திங்’ என்னும் ஆயத்த ஆடை நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி பிரபலம் அடைந்துவந்த நிலையில் அவர் அகால மரணம் அடைந்ததாக பட்டேலின் சகோதரர் ஆகாஷ் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #planecrash

X

Maalai Malar
www.maalaimalar.com