சேலத்தில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சேலத்தில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

சேலம்:

சேலம் வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திலகவதி (வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில் திலகவதி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திலகவதி பரிதாபமாக இறந்தார். 

இதையடுத்து அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீரகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com